ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது “ஆதிக் அஜித் சாரோட மிகப்பெரிய fanboy. அதனால் டீசரின் ஒவ்வொரு ஷாட்டும் high ஆக அமைந்துவிட்டது. இந்த டீசரால் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 18 ஆண்டுகள் கழித்து அஜித் சார் படத்துக்கு வேலைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.