திவ்யபாரதியை நான் டேட்டிங் செய்கிறேனா?... ஜி வி பிரகாஷ் அளித்த பதில்!

vinoth

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (09:21 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து இயங்கி வருபவர் ஜி வி பிரகாஷ். 2013 ஆம் ஆண்டு இவர்,  தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திவ்யபாரதி “ஜி வி சாரும், சைந்தவி மேமும் ஒன்றாக கான்செர்ட்டில் பங்கேற்கிறார்கள் என்றதும் என்னை விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் என்னை அதிகமாக டார்கெட் செய்கிறார்கள். அதிலும் பெண்கள்தான் அதிகமாக திட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்றீங்க? அவங்க நல்ல ஜோடி, ஏன் அவங்களை பிரிச்சீங்க? என்று கேட்கிறார்கள். நான் அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்வதில்லை. அப்படியே விட்டுவிடுவேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜி வி பிரகாஷ் “நான் திவ்யபாரதியை ‘டேட்’ செய்வதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால் நான் அவரை படப்பிடிப்புத் தளத்தைத் தவிர வேறு எங்கும் பார்த்ததே இல்லை. எனக்கு அவர் நல்ல நண்பர் மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்