பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் செல்வராகவன் கூட்டணி…. “நானே வருவேன்” ரிலீஸ் அப்டேட்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (16:32 IST)
நானே வருவேன் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷின் படங்கள் அதிகமாக ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் நானே வருவேன் கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் வெள்ளித்திரை விருந்தாகவே இருக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்