தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளி என புகழப்படும் இயக்குனர் வெற்றிமாறன் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு தனுஷை வைத்து "அசுரன்" படத்தை இயக்கியிருந்தார். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் சுமார் 100 நாட்களை தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. தனுஷின் சினிமா கேரியரில் மிக அதிக வசூல் செய்த படமாக அசுரன் உள்ளது.