தனுஷ் இயக்குவது இந்த கதையா! ஆச்சர்ய தகவல்

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (16:09 IST)
தனுஷ் நடிகராக அறிமுகம் ஆகி பாடலாசிரியர், பாடகராக அவதாரம் எடுத்து,  தயாரிப்பாளராக மாறி, பின்பு 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனரானார்.  இந்த படம் சூப்பர் ஹிட்டானது.


இயக்கிய முதல் படத்திலேயே, வயதான மனிதர்களின், பழைய காதல் உணர்வுகளை அற்புதமாக காட்டியிருந்தார் தனுஷ். படத்தை பார்த்த பலரும் மிகச்சிறந்த இயக்குனரின் படம் போல் இருந்ததாக பாராட்டினார்கள்.
 
இதையடுத்து தனுஷ், நடிப்பில் கவனம் செலுத்தினார். கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி  2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
 
இப்போது மீண்டும் படம் இயக்குவதுக்கு மாறியுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில்,   தனுஷ்,  ஹீரோவாக நடிக்கிறார். மேலும், நாகர்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக்  கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
 
ஷுட்டிங் மும்முரமாக நடந்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இப்போது படம் குறித்து புதிய தகவல்  வெளியாகி உள்ளது. தனுஷ் இயக்கும் இந்த படம் பழைய காலத்து கதை என்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதுக்கு முன்பு அதாவது 1947க்கு முன்பு   இருந்த கால கடத்தில் கதைகளம் இருப்பதாக கூறுகிறார்கள்.
 
மதராசபட்டினம் படத்தைப்போல் சுதந்திரம் வாங்கும் முன்பு நடந்த சம்பவத்தை படத்தை தனுஷ் காட்டுவார் என தெரிகிறது. இந்த படத்துக்கு கலை  இயக்குனராக முத்துராஜ் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்