தனுஷின் ‘ராயன்’ படத்தில் பிக்பாஸ் நடிகர்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

Siva

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:30 IST)
தனுஷ் நடித்து இயக்கி வரும் அவரது ஐம்பதாவது திரைப்படமான ராயன் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா; செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் நிலையில் இன்று நடிகர் சரவணன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான இவர் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பதாக இந்த அட்டகாசமான போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் என்ற சஸ்பென்சை அடுத்தடுத்து தனுஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

Saravanan sir from Raayan pic.twitter.com/inZs40LEjM

— Dhanush (@dhanushkraja) February 27, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்