3 கோடி மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

vinoth

திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:30 IST)
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தமிழில் தி லெஜண்ட் படத்தில் நடித்து இருந்தார். அதன் மூலம் தமிழில் கவனம் பெற்ற அவர், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அவர் ஒரு நேர்காணலில் “ரிஷப் பண்ட்டை என்னை காண்பதற்காக ஹோட்டல் அறை வாசலில் பல மணிநேரம் காத்திருந்தார்” எனக் கூறியிருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் இதை மறுத்தார். மேலும் ஊர்வசியை தனக்கு யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஊர்வசி மீண்டும் புகழ் வெளிச்சத்தில் சிக்கியுள்ளார். தன்னுடைய பிறந்தநாளை அவர் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டிக் கொண்டாடியுள்ளார். இந்த கேக்கை பிரபல பாடகர் யோ யோ சிங் அன்பளிப்பாக அளித்துள்ளாராம். இது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்