கர்ணன் டீசர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (12:44 IST)
கர்ணன் டீசர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
கர்ணன் டீசர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் மார்ச் 23ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் டீஸர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்