கர்ணனின் புறப்பாடு!! 23 ஆம் தேதி டீசர் ரிலீஸ்

சனி, 20 மார்ச் 2021 (15:13 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. 

 
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாகயுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கர்ணனின் புறப்பாடு என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்