பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் பாங்காங்கில் நடக்கவுள்ளது.
விறுவிறுப்பாக நடந்த இந்த படத்தின் முக்கியமானக் காட்சிகள் அனைத்தும் தற்போது படமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் தனுஷ் படமாக்கி முடித்துள்ளார். இனிமேல் வெளிநாட்டில் எடுக்க வேண்டிய காட்சிகளை மட்டும் இந்த மாத இறுதியில் தாய்லாந்தில் படமாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.