தனுஷ் படத்தின் நாயகன், தனுஷூக்கே வில்லன் ஆனது எப்படி தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (21:40 IST)
தனுஷ் நடித்து வரும் 'வடசென்னை' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் 'மாரி 2' படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார்



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் என்ற மலையாள நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.
 
டோவினோ தாமஸ் தனுஷ் தயாரித்து வரும் முதல் மலையாள படமான 'தரங்கம்' என்ற படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. 'தரங்கம்' படத்தில் டோவினோவின் நடிப்பை பார்த்து தனுஷ் பரிந்துரை செய்ய பாலாஜி தரணிதரன் வில்லன் வேடத்திற்கு அவரை ஓகே செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்