இறுதிக் கட்டத்தில் தனுஷ் 50 ஷூட்டிங்… அவரே வெளியிட்ட அப்டேட்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (07:27 IST)
கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ள தனுஷ் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்நிலையில் இப்போது தனுஷ் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த படத்தின் ஷூட்டிங்கின் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் அடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்