தனுஷ் நடிக்கும் "கர்ணன்" படத்தின் புதிய லுக் போஸ்டர்..!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (13:33 IST)
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வெற்றி நாயகனாக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் அசுர வெற்றிகொடுத்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது. கடைசியாக வெளிவந்த பட்டாஸ் திரைப்படமும் டீசண்டாக கலெக்ஷனை பெற்று கல்லா கட்டியது. 
 
அதையடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற படத்தில் நடித்து வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் தனுஷின் 44வது படத்தை குறித்த ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. 
 
நடிகர் தனுஷ் சற்றுமுன் கர்ணன் படத்தின் போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு #கர்ணன் #karnan shoot in progress என கூறியுள்ளார். தனுஷ் கையில் வாள் ஏந்தி மலையின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்தபடத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி தனுஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்