தனுஷ் D43 படத்தில் இணைந்த பிரசன்னா - சமீபத்திய தகவல் இதோ!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (17:44 IST)
’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் தன் பக்கம் திருப்பிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் இயக்கிய அடுத்த திரைப்படமான ’மாபியா’ என்ற திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தனுஷின் 43 வது படமாக உருவாகவுள்ளது.  ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் பிரசன்னா. தனுஷ் 43 படத்தில்  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும்  என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்