இரண்டு பாகங்களாக உருவான படத்தின் முதல் பாகம் வெளியான முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது லாபம் தரும் வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. வட இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்வதற்காகவும், முதல் பாகத்துக்கு வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்களை இயக்குனர் சீனு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.