பரபரப்பை ஏற்படுத்திய தேவர் பட போஸ்டர்! – தேசிய தலைவர் படம் குறித்து சர்ச்சை!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (12:14 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறை ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வரும் நிலையில் அதன் முதல்கட்ட போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழக தலைவர்களில் முக்கியமானவராகவும், தென் தமிழக பகுதிகளில் பிரபலமாகவும் இருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஊமை விழிகள், கருப்பு நிலா போன்ற படங்களை இயக்கிய அரவிந்த இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் தேவர் கதாப்பாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இஸ்லாமியரான அவர் இதற்காக தனியாக விரதம் இருந்து இந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது அதில் தேவரின் இளமை தோற்றம் மற்றும் வயதான தோற்றம் இடம்பெற்றுள்ள நிலையில், பின்னணியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவம், ராஜாஜி, காந்தி, காமராஜர் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன, இதனால் இந்த படம் பல வரலாற்று சம்பவங்களையும் கடந்து செல்லும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வரலாற்று சம்பவங்கள் சிலவற்றை திரித்து கூறலாம் எனவும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதில் வரலாற்றை திரிக்க ஒன்றும் இல்லை என்றும் தேவரின் வாழ்க்கை மட்டுமே பிரதானமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்