4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா? – கொண்டாட்டத்தில் லைகா!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (14:47 IST)
மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் நான்கு நாட்களில் கணிசமான தொகையை வசூல் செய்துள்ளதால் தயாரிப்பு நிறுவனமான லைகா மகிழ்ச்சியில் உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான படம் தர்பார். தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்த படம் வெளியானது. போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்த படத்தை பொதுமக்களும், ரஜினி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தர்பார் ப்டம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் ”எத்தனை பேர் வேண்டுமானாலும் கேம் ஆடலாம்.. ஆனால் சிம்மாசனம் ராஜாவுக்குதான்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்