நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணம்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (12:51 IST)
தமிழில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 

 
தமிழ் திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடன இயக்குநர் கூல் ஜெயந்த். இவர் சில காலமாகவே கேன்சரால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.
 
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்