இளமை மரணம் இதயத்தை உடைக்கிறது: புனித் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:15 IST)
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் கிட்டத்தட்ட இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார்
புனீத் ராஜ்குமாரின் இளமை மரணம்
இதயத்தை உடைக்கிறது
 
ஒரு மக்கள் கலைஞன்
மறைந்து போனான்
 
காவிரித் தண்ணீர்
இன்று கண்ணீர் உப்புக் கரிக்கிறது
 
நெருங்கிய பழக்கமில்லை
ஆயினும்,
தானாடாவிட்டாலும் 
சகோதரத் தசை ஆடுகிறது
 
அழுகின்ற உள்ளங்களுக்கு
ஆழ்ந்த இரங்கல்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்