குக் வித் கோமாளி அஸ்வின் நடித்த ‘என்ன சொல்லப் போகிறாய்’… முதல்முறை தொலைக்காட்சியில்!

வியாழன், 12 மே 2022 (15:00 IST)
அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி மற்றும் சில தனி ஆல்பங்கள் மூலமாக பிரபலம் ஆனவர் அஸ்வின். இந்நிலையில் இப்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தின் அடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அஸ்வின் தன்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு ஓவராக புகழ்ந்து பேசிகொண்டார்.

அதில் நான் இந்த படத்துக்கு முன்னர் 40 கதைகள் கேட்டேன். எல்லா கதைகளிலும் தூங்கிவிட்டேன். இந்த கதை கேட்கும் போது தூங்கவில்லை. அதனால் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன் எனப் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு அவரிடம் கதை சொன்ன உதவி இயக்குனர்களை அவமதிக்கும் விதமாக உள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதோடு முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு திமிரா என்று நெட்டிசன்கள் கலாய்த்தனர். 

இப்படி ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியோடு ஜனவரி 13 ஆம் தேதி வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஓடிடியில் வெளியாகி ஒரு மாதம் கழித்து வரும் மே 15 ஆம் தேதி ஜி தமிழ் தொலைக்காட்சியில் மாலை 3.30 மணிக்கு பிரீமியர் ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்