ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும்: கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

புதன், 11 மே 2022 (16:33 IST)
ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர் 
 
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து மாசு அதிகமாக வெளிவரும் காரணமாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது 
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள் என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர் 
 
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பம் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளனர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்றும், ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்