’ருத்ரன்’ படத்தை வெளியிட தடையா? சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வியாழன், 13 ஏப்ரல் 2023 (15:58 IST)
ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த படத்தை 21ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ’ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் நீக்கி உள்ளது. வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை பற்றி எந்த முடிவும் எடுக்கப்படாது என்று ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் நிறுவனம் பதில் அளித்த நிலையில் நாளை வெளியாக இருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வட இந்திய மொழிகளின் ருத்ரன் டப்பிங் உரிமையை குறித்த வியாபாரம் குறித்த பிரச்சனையின் காரணமாகத்தான் ஏற்கனவே இந்த படம் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்