இது குறித்து செய்தி வெளியிட்ட டப்பிங் யூனியன் சின்மயி கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது. இது தன்னை முடக்கும் செயல் எனக் கூறிய சின்மயி இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார்.
அந்த வழக்கை விசாரித்த சின்மயி மீதான தடைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் மார்ச் 25ஆம் தேதியன்று ராதாரவி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள சின்மயி தனது டிவிட்டரில் ‘எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் பின்னர் சட்டப்போர் நடக்க இருக்கிறது. நீதிவெல்லும்’ எனத் தெரிவித்துள்ளார்.