அம்பாத்தி ராயுடு, தோனி, ரிஷப் பண்ட் என எல்லோரையும் ஒத்திகைப் பார்த்தும் இன்னும் யார்மீதும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. இதனால் கோஹ்லியே அந்த இடத்தில் இறங்கலாம் எனவும் குரல்கள் எழுந்துள்ளன. உலகக்கோப்பைப் போட்டிகள் நெருங்கியுள்ள நிலையில் அந்த முடிவு எந்த அளவிற்கு சரியாக வரும் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பலவிதமாக கருத்துகள் கூறிவரும் நிலையில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் ‘ நான் கூறப்போகும் பெயரைக் கேட்டு நீங்கள் என்னைப்பார்த்து சிரிக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புஜாராதான் என் 4ம் நிலை வீரர். இதுவரை முயற்சி செய்தவர்களை விட புஜாரா ஒரு நல்ல பேட்ஸ்மென் தான் ஒருநாள் போட்டிகளில் ராகுல் திராவிட் ஆற்றிய ரோலை புஜாரா செய்ய முடியும்.’ எனக் கூறியுள்ளார்.