4 மாதங்களுக்குள் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:45 IST)
நான்கு மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதியின் இல்லங்களில் ஆர்டர்லி பணியில் இருக்கும் போலீசார் எடுபிடி வேலை பார்த்து வருவதாக குற்றஞ்சாட்டபட்டது.
 
இந்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பரவியதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நான்கு மாதங்களுக்குள் தமிழகத்தில்  ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஆர்டர்லி  பயன்படுத்தப்பட்டதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்