சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் தரம் சன்சத் என்ற இந்துமத அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின்போது, வெற்று பேச்சுகள் பேசப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கி பகுதியில் தரம் சன்சத் அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும், தவறினால் மாநில தலைமை செயலாளர் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.