கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரொனா தொற்று.. மனைவி டுவிட்டர் பதிவு

சனி, 1 மே 2021 (16:15 IST)
கொரொனாவால் தம் குடும்பத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிரிக்கெட் வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-2021 தொடர்  தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்கள் முழு திறமையைக் காட்டி வருகின்றன.

இந்தக் கோடை காலத்திலும் கொரொனா தொற்றுக் காலத்திலும் மக்களின் பொதுதுபோக்காக தொலைக்காட்சிகலின் வழியே பாக்க மகிழ்ச்சியூட்டுவதக ஐபிஎல் திருவிழா உள்ளது.

இந்தியாவில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்,தனது குடும்பத்துடன் இருக்க வேண்டுமென்க் கூறி இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், அஸ்வின் குடும்பத்தில் 1க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அஸ்வின் மனைவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:  ஒரே வாரத்தில் எங்கள் குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தோற்று குழந்தைகள் மூலம் பரவியுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Feeling ok enough to croak a tiny hi to all of you.6 adults and 4 children ended up testing+ the same week,with our kids being the vehicles of transmission - the core of my family,all down with the virus in different homes/hospitals..Nightmare of a week.1 of 3 parents back home.

— Wear a mask. Take your vaccine. (@prithinarayanan) April 30, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்