சின்னத்திரை லேடி சூப்பர்ஸ்டாருக்கு கொரோனா உறுதி !

புதன், 7 ஏப்ரல் 2021 (16:23 IST)
சமீபத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிருந்து விலகி  கணவர் சரத்குமாருடன் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது.
 
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
 
இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்துள்ளது
 
கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் நடிகையும், சின்னத்திரை லேடி சூபப்ர் ஸ்டாருமான  ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிருந்து விலகி கணவர் சரத்குமாரின் சமக கட்சியின்  அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகை ராதிகா சரத்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், கடன் விவகாரத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு தலா ஓராண்டு தண்டனை என்பது அப்பீல் போவதல் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்