சித்தி-2 தொடரில் இருந்து ராதிகா சரத்குமார் விலகியது ஏன்? வெளியான தகவல்

சனி, 13 பிப்ரவரி 2021 (23:53 IST)
சித்தி 2 தொடரில் நடிக்கப்போவதில்லை என்று ராதிகா சரத்குமார் கூறிவிட்ட நிலையில் அவர் ஏன் நடிக்கவில்லை என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அவர் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராடன் நிறுவனம் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி தொடர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சித்தி 2 தொடர் ஒளிப்பரப்பாகி வந்தது.

இந்நிலையில், ராதிகாவின் கணவரும் சமத்துவ  மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரசாரம் செய்துவருகிறார்.

அவருடன் இணைந்து முழுநேரமாக நடிகை ராதிகா அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்தப்படி அவர் சித்தி -2 தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் ராதிகா சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்