இந்த அறிவிப்பு அவரது கட்சி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சரத்குமாரின் கட்சி கமல் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் பட்டது என்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால் அதற்குள் ராதிகா போட்டியிடும் தொகுதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது