ஒரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வாய்ப்புகளைக் குவிக்கும் நடிகர்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (15:15 IST)
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழுக்கு அதிகளவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதையடுத்து அவர் அருண் விஜய்  நடிப்பில் ஹரி இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது தளபதி 65 படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவருக்கு மேலும் பல படங்களின் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்