அப்போது படத்தின் இயக்குநர் ராஜூ முருகன் கூறியதாவது:
இப்படத்தின் அடையாளமாக இருக்கும் வெரிவெரி பேட் பாடலை ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று நினைத்தேன். இப்படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் இல்லையென்ற்றால் இவ்வளவு தரத்தில் இப்படத்தை எடுத்திருக்க முடியாது. அதனால் அவருக்கு நன்றி . இது அரசியல் படமல்ல. ஆனால் ஒரு நியாயமான படமாக இருக்கும். என்னைபொருத்த வரையில் அரசியலும் வாழ்க்கையும் வேறு வேறு அல்ல.
மேலும் தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில் என்று இப்படத்தை விளம்பரம் செய்த போது உடனே சிலர் என்னிடம் என்ன சந்தோஷ் நாராயணனை தோழராக மாற்றி விட்டீர்கள் என கேட்டர்கள். ஆனால் உலகத்தில் தோழர் என்பது உன்னதமான வார்த்தை. அது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல . தற்போது அதன் பொருளை மாற்றி விட்டார்கள்.தோழர் என்பது அன்பின் வார்த்தை ... இவ்வாறு அவர் தெரிவித்தார்.