எங்க பங்காளி சண்டைலாம் தாண்டி.. திமுகவை வீழ்த்துவதுதான் ஒரே இலக்கு! - டிடிவி தினகரன்

Prasanth Karthick

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (09:17 IST)

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் டிடிவி தினகரன் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பாஜக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியானது. ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ்ஸின் உரிமை மீட்பு குழு ஆகியவையும் உள்ளன. 

 

டிடிவி தினகரன், சசிக்கலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எந்த காலத்திலும் அதிமுகவிற்குள் வர முடியாது என்றும், அவர்களுடன் கூட்டணி இல்லை என்றும் தொடர்ந்து அதிமுக கூறி வந்த நிலையில் அதை தாண்டி அமைந்துள்ள இந்த கூட்டணி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “நாங்கள் பங்காளிகள். எங்களுக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கும். அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தீயசக்தியாக அடையாளம் காணப்பட்ட திமுகவை வீழ்த்துவதே எங்கள் அனைவரின் குறிக்கோள். அதற்காக ஒன்று சேர்த்துள்ளோம்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்