மலையாள சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளால நம்பர் 1 நடிகராகவும், வசூல் சக்கரவர்தியாகவும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் மோகன்லால். மலையாள சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரகவும் அதிக விருதுகள் பெற்ற நடிகராகவும் அறியப்படுகிறார்.
இந்நிலையில், இவரது 61 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர்கள் மோகன்லாலி, காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
மேலும், மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி திரைப்படம் மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (Marakkar Arabikadalinte Simham) இந்த திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி ரம்ஜான் திருநாளின் போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது என்பதும் புரமோஷன் பணிகள் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது