#தளபதி_நாளைய_அதிபதி... விஜய்யை வாழ்த்தி டுவிட்டரில் டிரெண்ட்டிங்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (14:22 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். வரும் ஜூன் 22 ஆம் நாள் விஜய்க்கு பிறந்தநாள் எனவே அவரது ரசிகர்கள் அவரை சிறப்பித்து போஸ்டர் ஒட்டி, சமூக வலைதளங்களில் அவரது புகழைப் பரப்பினர்.

அதில், மதுரை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரில் இந்நிலையில், கேரளா போன்று நேர்மையாகவும், ஆந்திரா போன்று மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்  ஆட்சி செய்து, தமிழகம் அதேபோல் அமைய வாங்கய்யா வாத்தியாரய்யா….வரவேற்க வந்தோம் ஐயா,உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் என்று மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில்  இன்று விஜய்யின் ரசிகர்கள் டுவிட்டரில் #தளபதி_நாளைய_அதிபதி   என்று ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். அதில், விஜயை பாலிவுட், கோலிவுட், மாலிவுட்,டோலிவுட் ஸ்டார்கள்  வாழ்த்துவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டும்,  அவரது புகழையும்  பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்