யானையுடன் போஸ் கொடுத்த ஆர்த்தி! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

வெள்ளி, 3 மே 2019 (11:18 IST)
நகைச்சுவை நடிகை ஆர்த்தி யானையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டுள்ளார். 


 
தமிழ் சினிமாவில் கோவை சரளாவுக்குப் பிறகு நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்து அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து கலக்கினார்.
 
ஆர்த்தியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்துவந்த மாஸ்டர் கணேஷை காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. குண்டான தோற்றம் தான் இவரது தனித்துவமான அழகு. 
 
எனவே ஒருபோதும் உடல் எடையை பற்றி கவலைபடாமல் தனது உடல் எடையை யாரேனும் கிண்டல் செய்தாலும் அதனை ஆர்த்தி பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை இந்நிலையில் எப்போதும்  சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்த்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். 


 
அதில் திருச்செந்தூர் கோவில் யானையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டதோடு, "இனத்துடன் இனம் சேர்ந்தது. யானை பெயர் தேவயானை , இன்னொரு யானையை  பற்றி உங்களுக்கே தெரியும்" என்று நகைச்சுவையாக கூறி தன்னை தானே கலாய்த்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்