இன்சூரன்ஸ் இல்லா காரில் வந்தாரா விஜய்? செய்தி தொடர்பாளர் விளக்கம்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:38 IST)
நடிகர் விஜயின் சிவப்பு காரின் இன்சூரன்ஸ் குறித்த சர்ச்சைகளுக்கு செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கமளித்துள்ளார். 

 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடந்த நிலையில் நடிகர் விஜய் தனது வாக்கை நீலாங்கரை வாக்குச்சாவடியில் பதிவு செய்தார். இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலானது. விஜய் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வருகை தந்தார்.
 
இந்நிலையில் நடிகர் விஜயின் சிவப்பு காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டது என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு தற்போது விஜய்யின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகர் விஜய் வந்து வாக்களித்த கார் இன்சுரன்ஸ் மே 28 வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளார்.
 
விஜய் வாக்களித்த போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்து நிலையில் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் அவர் வாக்கை செலுத்த உதவினர். இதனால் வாக்களிக்க வந்த சில பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அவர்கள் விஜய் திரும்பி செல்லும் போது இதுபற்றி ஆதங்கத்தை வெளிப்படுத்த அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்