சினிமா பிரபலங்களை பதம் பார்க்கும் கொரோனா! மேக்னா ராஜ், க்ரித்தி சனோனுக்கு தொற்று உறுதி!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (10:24 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட நடிகரான சரத்குமார் திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற நிலையில் அவருக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரிடம் தமிழக முதல்வர் உள்ளிட்ட பலர் நலம் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகை க்ரித்தி சனோன் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் கொரோனா சோதனை மேற்கொண்ட போது தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல பிரபல நடிகையும் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியுமான மேக்னா ராஜூம், அவரது குழந்தையும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்