சிரஞ்சீவி படத்தில் இணைந்த சல்மான் கான்… மெகா ஸ்டார் நெகிழ்ச்சி பதிவு!

வியாழன், 17 மார்ச் 2022 (13:37 IST)
சல்மான் கான் தன்னுடைய காட்பாதர் படத்தில் நடிப்பது குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் மலையாள லூசிபரில் முக்கிய வேடத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையடுத்து இப்போது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. இதையடுத்து சிரஞ்சீவி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘சகோதரா, உங்கள் வருகை எங்கள் படக்குழுவினரின் ஆற்றலையும், எதிர்பார்ப்பையும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. உங்களுடன் நடிப்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம். படத்தில் உங்கள் வருகைக் கண்டிப்பாக ஒரு மேஜிக்கை கொண்டுவரும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்