லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

vinoth

வியாழன், 8 மே 2025 (09:13 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. லோகேஷ் தன்னுடைய ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தியதால் இந்த படம் தாமதமானதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் மாதவன் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்