Life is very short நண்பா.... விஜய் பாடலுக்கு டிக் டாக் செய்த சிரஞ்சீவி சர்ஜா - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (17:26 IST)
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு     இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். இந்நிலையில் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம். குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் முழுக்க சிரஞ்சீவி சார்ஜா குறித்த வீடியோக்களும் , செய்திகளுமாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது அவர் உயிரோடு இருக்கும் போது நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்