சிரஞ்சீவி படத்திற்கு அஜித் பட டைட்டில்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:29 IST)
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு அஜித் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படம் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் என்றும் கூறப்பட்டது இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் காட்பாதர் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே அஜித் நடித்த காட்பாதர் என்ற திரைப்படம் அதன்பின் வரலாறு என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதும் தற்போது அஜித் நடித்த திரைப்படத்தின் டைட்டில் சிரஞ்சீவி படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்