எனது நான்கு கேப்டன்கள்… புகைப்படத்தோடு சிரஞிசீவி வெளியிட்ட கமெண்ட்!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:58 IST)
இந்தி திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து முடிக்க உள்ளாராம்.

தெலுங்கு சினிமா ரசிகர்களால் மெகா ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் சிரஞ்சீவி அரசியல் தோல்வியால் இப்போது சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவர் நடித்த சைரா நரசிம்மா ரெட்டி எனும் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இப்போது அவர் வேதாளம் ரீமேக் மற்றும் லூசிபர் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதையடுத்து இயக்குனர் பாபி இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நடந்த லூசிபர் பட பூஜையின் போது சைரா இயக்குனர் சிவா மற்றும் தனது அடுத்த மூன்று படங்களின் இயக்குனரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதை டிவிட்டரில் வெளியிட்ட அவர் ‘எனது நான்கு கேப்டன்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்