பிக்பாஸ் போட்டியாளராகும் ‘சின்ன மருமகள்’ சீரியல் நடிகை.. ஆச்சரிய தகவல்..!

Siva

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (17:19 IST)
விஜய் டிவியில் பிக் பாஸ் எட்டாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மாகாபா, ஜாக்லின் உள்பட சில விஜய் டிவி பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மகள் சீரியலில் நடித்து வரும் பானுமதி என்பவர் பிக் பாஸ் போட்டியாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

அடிப்படையில் நடன கலைஞரான இவர் 15 வயதிலேயே திருமணம் செய்தார் என்பதும் இவரது கணவர் இறந்த பின்னர் இரண்டு மகன்களை நடிப்பின் மூலம் வருமானத்தில் வைத்து பட்டதாரி ஆக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகன்களை பெருமைப்படுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு தாக்குப் பிடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த நிகழ்ச்சியின் புரமோ படப்பிடிப்பிலும் விஜய் சேதுபதி கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்