சின்மயிக்கு தனிமையில் மகிழ்ந்த புகைப்படத்தை அனுப்பிய ரசிகர் - கொடுத்தாங்க பாரு பதிலடி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (14:09 IST)
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வந்தனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்ப அதை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். 

தொடர்ந்து இப்படி ஆண்களின் ஆபாச முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுத்தி பெண்களுக்கு ஆதரவாக இருந்து வரும் சின்மயிக்கு தொல்லைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆம், அண்மையில் சின்மயிக்கு ரசிகர் ஒருவர் தான் தனிமையில் மகிழ்ந்த புகைப்படத்தை வெளியிட அதை சற்றும் யோசிக்காமல் இன்ஸ்டாவில் பதிவிட்டு, " அவர்களின் வருங்கால கணவர் போல பெண்கள் அனுமதியில்லாமல் இதுபோன்ற போட்டோ மற்றும் வீடியோக்களை விஷமி ஆண்கள் அனுப்பிக்கிறார்கள் என கூலாக கொந்தளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்