நம்பர் 1 ட்ரெண்டிங்கில் மாமனார், நம்பர் 2 ட்ரெண்டிங்கில் மருமகன் - மிஞ்சப்போவது யார்?

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:12 IST)
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாசு" படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இயக்கம் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 
 
தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
இந்நிலையில் நேற்று இப்பாத்தின் "சில் ப்ரோ" என்ற லிரிகள் வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடைப்பெற்றுள்ளது.  நம்பர் ட்ரெண்டிங்கில் மாமனாரின் சும்மா கிழி பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே மாமனாரை மிஞ்சி நம்பர் ஒன் ட்ரெண்டில் தனுஷ் புகுந்து விளையாடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்