வெளியாகாத இமைக்கா நொடிகள் - ரசிகர்கள் ஏமாற்றம்

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (12:28 IST)
நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம் ஏராளமான தியேட்டர்களில் இன்று வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கிய 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்றிரவே அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ளவர்கள் பதிவு செய்த டுவீட்டுகளில் இருந்து 'இமைக்கா நொடிகள்' படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு பணம் திருப்பி அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.


 
அமெரிக்கா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் பல ஊர்களில் வெளியாகவில்லை. குறிப்பாக மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்படம்ம் வெளியாகவில்லை. எனவே, இந்த ஊர்களில் ஆன்லைனில் காலை முதல் காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

 
சற்று தாமமாக 11.30 மணிக்கு காட்சி திரையிடப்படும் என தியேட்டர்களில் அறிவித்தனர். ஆனால், 12 மணி வரைக்கும் கூட படம் வெளியாகதால் பல ரசிகர்கள் டிவிட்டர்கள் இதுபற்றி பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்