தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை வாழ்மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே சென்னையில் 2000க்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. அதே போல இப்போது இப்போது பாஸீட்டிவ் சதவீதமும் 5.3 ஆகக் குறைந்துள்ளது. 100 பேர் சோதனை செய்துகொண்டால் அதில் 6க்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இந்த விகிதம் அதிகபட்சமாக 22 வரை சென்றது குறிப்பிடத்தக்கது.