சந்திரமுகி 2 படத்துக்காக பி வாசு தேடி சென்ற நடிகை…

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (16:49 IST)
நடிகை சாய்பல்லவி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரை சந்திரமுகி 2 வில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் வேலைகள் தூசு தட்டப்பட்டுள்ளன. திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு தொடங்க அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. படத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவியை தேடி சென்று கதை சொல்லியுள்ளார் பி வாசு. ஆனால் கதையில் சில மாற்றங்களை சாய்பல்லவி சொன்னதாக சொல்லப்படுகிறது. அதனால் அதிருப்தி அடைந்த பி வாசு இப்போது வேறு ஒரு கதாநாயகியை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்