டியர் "பிசாசு".... ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (12:01 IST)
நடிகை ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த பிசாசு 2 படக்குழு 
 
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. சம்பளத்துக்கெல்லாம் ஆசைப்படாமல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதுதல், பாடுதல் மற்றும் இசையமைப்பது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். 
 
கடைசியாக வெளியான வடசென்னை படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்ட நிலையில் இப்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் பேயாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தந்து 35 வது பிறந்தநாளை கொண்டாடிய ஆண்ட்ரியாவுக்கு பிசாசு 2 படக்குழுவினர் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்